தே.மு.தி.க. துணை செயலாளர் சுதீசுக்கு கொரோனா தொற்று

எல்.கே.சுதீஷ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சென்னை,
தே.மு.தி.க. கட்சியின் துணை செயலாளராக இருப்பவர் எல்.கே.சுதீஷ் (வயது 53). இவர் தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்தின் மைத்துனர் ஆவர். இந்த நிலையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை ஆதரித்து விருத்தாசலத்தில் தீவிர பிரசாரத்தில் சுதீஷ் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து எல்.கே.சுதீஷ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அம்மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story