அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு


அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 March 2021 8:49 AM IST (Updated: 17 March 2021 8:49 AM IST)
t-max-icont-min-icon

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

ஆரத்தி எடுக்கும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக அ.தி.மு.க. வேட்பாளர் நத்தம் விசுவநாதன் மீது தி.மு.க. புகார் அளித்துள்ளது. இந்நிலையில், நத்தம் தொகுதிக்குட்பட்ட காட்டுவேலம்பட்டி பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது பணம் கொடுத்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. 

வாக்காளர் வாக்களிக்க லஞ்சம் வழங்கியதாக குற்றப்பிரிவு 171 E ன் கீழ் நத்தம் போலீசார் நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.விசுவநாதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தல் பிரிவு வீடியோ கண்காணிப்பு குழு தலைவர் மைக்கேல்ஆரோக்கியராஜ் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story