குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக சென்னை வருகை


குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக சென்னை வருகை
x
தினத்தந்தி 9 March 2021 10:56 PM IST (Updated: 9 March 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் சுற்றுப்பயணமாக சென்னைக்கு வருகை தந்துள்ளார்.

புதுடெல்லி,

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், 3 நாட்கள் பயணம் மேற்கொள்வதற்காக தமிழகம் வர இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி இன்று மாலை டெல்லியிலிருந்து தனி விமானத்தில் கிளம்பிய அவர், சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் குடியரசு தலைவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் சென்று வரவேற்றார். பின்னர் அங்கிருந்து காரில் கவர்னர் மாளிகைக்கு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். இதையடுத்து நாளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை மற்றும் நாளை மறுநாள் திருவள்ளுவர், அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொள்கிறார்

தனது 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 11 ஆம் தேதி பிற்பகலில் சென்னையிலிருந்து தனி விமானத்தில் ராம்நாத் கோவிந்த் டெல்லி செல்ல இருக்கிறார். குடியரசு தலைவர் வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலைய பகுதியில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் 11 ஆம் தேதி மாலை வரை தொடரும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story