மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் கிடைத்த டார்ச் லைட் சின்னம் நன்றி தெரிவித்தார் கமல்ஹாசன்
![மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் கிடைத்த டார்ச் லைட் சின்னம் நன்றி தெரிவித்தார் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் கிடைத்த டார்ச் லைட் சின்னம் நன்றி தெரிவித்தார் கமல்ஹாசன்](https://img.dailythanthi.com/Articles/2021/Jan/202101151925347121_8754370Torchlight-symbol-returned-to-Peoples-Justice_SECVPF.gif)
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளுக்கு சமீபத்தில் சின்னங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தமிழகத்தில் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்தது.
சென்னை,
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளுக்கு சமீபத்தில் சின்னங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தமிழகத்தில் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்தது.
ஆனால், கமல்ஹசான் தனது மக்கள் நீதி மய்யத்துக்கு கேட்ட டார்ச் சின்னத்தை, புதுச்சேரிக்கு மட்டும் ஒதுக்கி விட்டு தமிழகத்தில் ஒதுக்கவில்லை. டார்ச் சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கி விட்டது. இதனால் இது குறித்து கமல்ஹாசன் சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே டார்ச் லைட் சின்னத்தை பெற்ற கட்சி, திடீரென அந்த சின்னத்தை வேண்டாம் என்று ஒதுக்கியது.
இந்நிலையில், கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பதிவில், “மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 15, 2021
ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது.
(1/2) pic.twitter.com/MqzKEBiidR
இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்!
— Kamal Haasan (@ikamalhaasan) January 15, 2021
(2/2)