செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மதியம் 1 மணிக்கு உபரி நீர் வெளியேற்றம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 5 Jan 2021 11:28 AM IST (Updated: 5 Jan 2021 11:28 AM IST)
t-max-icont-min-icon

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபர் நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதனால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஏரியின் நீர்மட்டம் 23 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, இன்று பிற்பகல் 1 மணிக்கு முதற்கட்டமாக 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது. 

ஸ்ரீபெரும்புதுர் -குன்றத்தூர் சாலை தடைபடும் என்பதால், சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  உபரிநீர் திறப்பின் காரணமாக அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story