தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு


தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 24 Dec 2020 11:09 PM IST (Updated: 24 Dec 2020 11:09 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் 6 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்தியில்,

பால்வளத்துறை ஆணையர் வள்ளலார், தொழிலாளர்துறை ஆணையராகவும், தொழிலாளர்துறை ஆணையர் நந்தகோபால், பால்வளத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநில திட்ட கூடுதல் இயக்குநராக அமிர்தா ஜோதியும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை செயலாளராக கற்பகத்தையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ரமண சரஸ்வதி மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை இயக்குநராக கமல் கிஷோர் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story