பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டிசம்பர் 30 ஆம் தேதி தமிழகம் வருகை
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் டிசம்பர் 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்த போது, அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து வரும் டிசம்பர் 30 ஆம் தேதி பாஜக தேதிய தலைவர் ஜே.பி.நட்டா, 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர்கள் கூறுகையில், ஜே.பி.நட்டா தமிழகத்திற்கு வரும் போது, தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story