பழனி முருகன் கோவிலில் வரும் 1-ஆம் தேதி முதல், மீண்டும் மின் இழுவை ரயில் சேவை இயக்க முடிவு - கோவில் நிர்வாகம்
![பழனி முருகன் கோவிலில் வரும் 1-ஆம் தேதி முதல், மீண்டும் மின் இழுவை ரயில் சேவை இயக்க முடிவு - கோவில் நிர்வாகம் பழனி முருகன் கோவிலில் வரும் 1-ஆம் தேதி முதல், மீண்டும் மின் இழுவை ரயில் சேவை இயக்க முடிவு - கோவில் நிர்வாகம்](https://img.dailythanthi.com/Articles/2020/Nov/202011291652547444_At-the-Palani-Murugan-Temple-From-the-1st-of-coming-Decided_SECVPF.gif)
பழனி முருகன் கோவிலில் வரும் 1-ஆம் தேதி முதல், மீண்டும் மின் இழுவை ரயில் சேவை இயக்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வரும் 1-ஆம் தேதி முதல், மீண்டும் மின் இழுவை ரயில் சேவையை வழங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
இது கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;-
பழனிக் கோயிலில் டிச.1 முதல் மூன்று வின்ச்சுகளும் 50 சதவிகித பக்தர்களுடன் இயக்கப்படும் மின்இழுவை ரயிலில் இருவழிப்பாதை கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
செல்போன், கேமரா போன்றவற்றிற்கு அனுமதி இல்லை. ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்யமுடியும். எந்த வின்ச்சுக்கு எந்த நேரத்துக்கு பதிவு செய்யப்பட்டதோ அதில் மட்டுமே பயணிக்க முடியும். குறிப்பிட்ட நேரத்துக்கு கால்மணி நேரம் முன்னரே அசல் ஆதார் போன்ற சான்றுகளுடன் நிலையம் வந்துவிட வேண்டும் என திருக்கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, ஐ.ஏ.எஸ்., அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story