நிவர் புயலை எதிர்கொள்ள கல்பாக்கம் அணுமின் நிலையம் தயார் நிலையில் உள்ளது - அணுமின் நிலைய இயக்குனர்
நிவர் புயலை எதிர்கொள்ள கல்பாக்கம் அணுமின் நிலையம் தயார் நிலையில் உள்ளதாக அணுமின் நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக அணுமின் நிலையத்தில் உள்ள 2-வது அலகில் முழு கொள்ளளவான 200 மெகாவாட் என்ற அளவில் மின்சார உற்பத்தி நடந்து வருகிறது. அனைத்து மின்சார உற்பத்தி அலகுகளும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அதே போன்று புயல் கரையை கடக்கும்போது சிறப்பாக செயல்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
கடற்கரை ஓரம் மணல் மூட்டைகள் உள்பட புயலை எதிர்கொள்ள தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. கட்டிடங்கள் மற்றும் மழைநீர் கட்டமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து கண்காணிப்பதுடன், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் தயார் நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.
மேற்கண்ட தகவலை அணுமின் நிலைய இயக்குனர் எம்.சீனிவாஸ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story