ஜம்மு காஷ்மீரில் மரணமடைந்த தமிழக வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்


ஜம்மு காஷ்மீரில் மரணமடைந்த தமிழக வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
x
தினத்தந்தி 2 Aug 2020 10:37 AM IST (Updated: 2 Aug 2020 10:37 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் மரணமடைந்த தமிழக வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள புள்ளவராயன்குடிகாடு வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகன் திருமூர்த்தி (வயது47). இவர் ஜம்முகாஷ்மீரில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி அங்கு திருமூர்த்தி எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் மரணமடைந்த தமிழக வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர் இறுதிசடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுபணி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் மரணம் அடைந்த ராணுவ வீரர் திருமூர்த்திக்கு தமிழரசி (44) என்ற மனைவியும், அகல்யா (24) என்ற மகளும், அகத்தியன் (22) என்ற மகனும் உள்ளனர்.


Next Story