கொடிவேரி தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறப்பு - அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்கள் தண்ணீரை திறந்து விட்டு, மலர் தூவி வணங்கினர். தொடா்ந்து 120 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீரால் கோபிசெட்டிபாளையம், அந்தியூா், பவானி ஆகிய மூன்று தாலுகாக்களில் உள்ள 24 ஆயிரம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story