"நாளை ஆவின் பால் கிடைக்கும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு


நாளை ஆவின் பால் கிடைக்கும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு
x
தினத்தந்தி 21 March 2020 5:54 PM IST (Updated: 21 March 2020 5:54 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து ஆவின் கிளைகளிலும், நாளை ஆவின் பால் கிடைக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் நாளை பேருந்து, மெட்ரோ ரயில்கள் இயங்காது. மதுக்கடைக்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பால் உற்பத்தியாளர்கள், நாளை பால் விநியோகம் செய்வதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். 

இந்நிலையில் அனைத்து ஆவின் கிளைகளிலும், நாளை ஆவின் பால்  தங்குதடையின்றி கிடைக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

Next Story