மாணவர்களுடன் பிரதமர் உரை: பள்ளிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் - கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவு


மாணவர்களுடன் பிரதமர் உரை: பள்ளிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் - கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவு
x
தினத்தந்தி 19 Jan 2020 10:58 PM IST (Updated: 19 Jan 2020 10:58 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் உரையை மாணவர்கள் கேட்க, நாளை அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பொதுத்தேர்வை நம்பிக்கையுடனும் , பயமின்றியும் எழுதும் வகையில் பள்ளி மாணவர்களுடன் நாளை டெல்லியில் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

இந்த உரை, அரசு தொலைக்காட்சி, வானொலி மற்றும் சில மத்திய அரசின் இணையதளங்கள் மூலமும் ஒளிபரப்பப்படுகிறது. காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் காண்பதற்கும் , கேட்பதற்கும் அனைத்து பள்ளிகளும் முன்னதாகவே ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குநரகம், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பிரதமரிடம் நேரடியாக மாணவர்கள் வினாக்களை எழுப்புவதற்கு வசதியாக தொலைக்காட்சி மற்றும் இதர சாதனங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நிகழ்ச்சி முடிந்த பின் அதனை கண்டுகளித்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பின்னூட்டம் ஆகிய தகவல் அடங்கிய ஆவணங்களை தொகுத்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Next Story