திருச்சி மாவட்டத்திற்கு 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்சி மாவட்டத்திற்கு 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.
திருச்சி,
அரையாண்டு தேர்வு, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக ஜனவரி 4 -ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது ஆனால் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவடையாத காரணத்தால் ஜனவரி 6-ம் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், திருச்சியில் ஜனவரி 6-ம் தேதி பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஜனவரி 6-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அதே நேரத்தில் அன்றைய தேதியில் தேர்வு நடைபெறும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தாது என்றும் கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.
எனவே ஜனவரி 6-ம் தேதியும் திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்பதால் அம்மாவட்டத்தில் மட்டும் ஜனவரி 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story