உள்ளாட்சித் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நேரம் நிறைவடைந்தது


உள்ளாட்சித் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நேரம் நிறைவடைந்தது
x
தினத்தந்தி 30 Dec 2019 11:59 AM (Updated: 30 Dec 2019 12:57 PM)
t-max-icont-min-icon

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நேரம் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

சென்னை,

தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்து இன்று 158 ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி 61.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நேரம் நிறைவடைந்தது. 5 மணிக்குள் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணிகளில் மாநிலம் முழுவதும் சுமார் 61,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இரண்டு கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் ஜனவரி 2 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

Next Story