மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 28 Nov 2019 12:47 PM IST (Updated: 28 Nov 2019 12:47 PM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுரை, 

உலக அளவில் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மீனாட்சி அம்மன் கோவில் வளாக பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை  மேற்கொண்டுள்ளனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே  அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலின் உள்பகுதியிலும் நுழைவு பகுதிகளிலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story