தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி


தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை  தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 26 Nov 2019 12:09 PM IST (Updated: 26 Nov 2019 12:09 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி! விழுப்புரத்தை பிரித்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

சென்னை

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை அருகே உள்ள சாமியாா் மடம் மைதானத்தில் நடைபெற்ற  விழாவுக்கு தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமை தாங்கினார்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடக்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும்,  அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

வருவாய், பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், சட்டம்-கனிம வளத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம், எம்எல்ஏக்கள் இரா.குமரகுரு, அ.பிரபு, எம்.சக்கரபாணி, ஆா்.முத்தமிழ்செல்வன், வருவாய் நிா்வாக ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை செயலா் அதுல்ய மிஸ்ரா, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை ஆகியோா் விழாவில் கலந்து கொண்டனர்.

Next Story