குழந்தை சுஜித்தை மீட்க ராட்சத எந்திரம் ஏற்றி வந்த லாரி நடுவழியில் பழுதடைந்து நின்றது
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இருந்து ராட்சத எந்திரம் ஒரு பெரிய லாரியில் ஏற்றி கொண்டு வரப்பட்டது.
திருச்சி,
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் வில்சன் என்ற 2 வயது குழந்தையை மீட்பதற்காக காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இருந்து ராட்சத எந்திரம் ஒரு பெரிய லாரியில் ஏற்றி கொண்டு வரப்பட்டது. இந்த லாரி திருச்சியை தாண்டி மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு 11.30 மணி அளவில் எந்திரத்தை ஏற்றி வந்த லாரி திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பூலாங் குளத்து பட்டி என்ற இடத்தில் பழுதடைந்து நின்றது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த லாரியை பழுதுபார்ப் பதற்காக தொழில் நுட்ப குழுவினர் விரைந்தனர். இது குழந்தை சுஜித்தை மீட்பதில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story