குரூப்-2 புதிய பாடத்திட்டம்; தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சி பெற முடியாது: டி.என்.பி.எஸ்.சி. செயலர் பேட்டி
குரூப்-2 புதிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சி பெறுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி. செயலர் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில், டி.என்.பி.எஸ்.சி. செயலர் நந்தகுமார் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசும்பொழுது, டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம் இதுவரை நடந்தது இல்லை. இனி வரும் நாட்களிலும் நடக்க வாய்ப்பில்லை.
முதன்மைத்தேர்வில் மொழிப்பாடம் எழுத்துத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இதனால்தான் முதல் நிலைத்தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளது.
குரூப்-2 முதன்மை பாடம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் குரூப்-2 தேர்வில் இனி கிராமப்புற மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள்.
குரூப்-2 பழைய பாடத்திட்டத்தின்படி தமிழே தெரியாத ஒருவர் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்ல முடியும். ஆனால் புதிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சி பெறுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story