எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தல் களம் கண்ட மு.க.ஸ்டாலினுக்கு கம்யூனிஸ்டு கட்சி பாராட்டு
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தல் களம் கண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கம்யூனிஸ்டு கட்சி பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறது.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற அபரிமிதமான வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியை உறுதி செய்திட அனைத்து மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேர்தல் களம் கண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அனைத்து தோழமை கட்சியின் தலைவர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களின் தீர்ப்பாக அமைந்துள்ள தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் தொடர்ந்து எதிர்காலத்தில் மதவெறி சக்திகளை எதிர்த்தும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் ஜனநாயக உரிமைகளை பேணி காக்கவும், அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் இணைந்து பணியாற்றுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story