பா.ஜனதா வேட்பாளர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர் பின்னடைவு
கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பா.ஜனதா சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மீண்டும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் வேட்பாளராக வசந்தகுமார் இறக்கப்பட்டார்.
வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா வேட்பாளர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் 3,47,792 வாக்குகளைப் பெற்றுள்ளார். பொன். ராதாகிருஷ்ணன் 1,90,747 வாக்குகளைப் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையே ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் நிலவுகிறது.
Related Tags :
Next Story