தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை


தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
x
தினத்தந்தி 23 May 2019 11:39 AM IST (Updated: 23 May 2019 11:39 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

தூத்துக்குடி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.  இறுதி கட்ட தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்தது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது.  முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில், தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி முன்னிலை பெற்றார்.  தொடர்ந்து பிற வாக்குகளும் எண்ணப்பட்டன.

இந்த வாக்கு எண்ணிக்கையில், தி.மு.க. வேட்பாளர் கனிமொழி 62 ஆயிரத்து 821 வாக்குகள் பெற்றுள்ளார்.  இதேபோன்று அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 21 ஆயிரத்து 124 வாக்குகள் பெற்றுள்ளார்.  இதனால் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

Next Story