தந்தி டி.வி. நடத்திய 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் ( 12 தொகுதி)
தந்தி டி.வி. நடத்திய 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று இரவு 11 தொகுதிகள் வெளியாகிறது.
சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலின் தேர்தலுக்குப் பிறகான பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் தினமும் இரவு 9.30 மணிக்கு தந்தி டி.வி.யின் மக்கள் யார் பக்கம்? நிகழ்ச்சியில் வெளியாகி வருகின்றன.
நேற்று இரவு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சாத்தூர், பெரம்பூர், தஞ்சாவூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், பாப்பிரெட்டிப்பட்டி, விளாத்திக்குளம், மானாமதுரை, பெரியகுளம், பூந்தமல்லி, மற்றும் புதுவையின் தட்டாஞ்சாவடி உள்ளிட்ட 12 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தலுக்கு பிறகான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.
குடியாத்தம் சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?
அதிமுக கூட்டணி 38% - 44%
திமுக கூட்டணி 35% - 41%
அமமுக 10% - 16%
மற்றவை 5% - 11%
சோளிங்கர் சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?
அதிமுக கூட்டணி 43% - 49%
திமுக கூட்டணி 39% - 45%
அமமுக 4% - 10%
மற்றவை 2% - 8%
தஞ்சாவூர் சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?
திமுக கூட்டணி 37% - 43%
அதிமுக கூட்டணி 35% - 41%
அமமுக 15% - 21%
மற்றவை 1% - 7%
பெரம்பூர் சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?
திமுக கூட்டணி 40% - 46%
அதிமுக கூட்டணி 35% - 41%
அமமுக 6% - 12%
மற்றவை 7% - 13%
திருப்போரூர் சட்டமன்றதேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?
அதிமுக கூட்டணி 42% - 48%
திமுக கூட்டணி 40% - 46%
அமமுக 5% - 11%
மற்றவை 1% - 7%
சாத்தூர் சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?
திமுக கூட்டணி 37% - 43%
அதிமுக கூட்டணி 33% - 39%
அமமுக 16% - 22%
மற்றவை 2% - 8%
விளாத்திக்குளம் சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?
அதிமுக கூட்டணி 31% - 37%
திமுக கூட்டணி 29% - 35%
அமமுக 15% - 21%
மற்றவை 13% - 19%
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?
அதிமுக கூட்டணி 36% - 42%
திமுக கூட்டணி 34% - 40%
அமமுக 14% - 20%
மற்றவை 4% - 10%
மானாமதுரை சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?
அதிமுக கூட்டணி 36% - 42%
திமுக கூட்டணி 34% - 40%
அமமுக 16% - 22%
மற்றவை 2% - 8%
பெரியகுளம் சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?
அதிமுக கூட்டணி 36% - 42%
திமுக கூட்டணி 34% - 40%
அமமுக 15% - 21%
மற்றவை 3% - 9%
தட்டாஞ்சாவடி சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?
அதிமுக கூட்டணி 42% - 48%
திமுக கூட்டணி 38% - 44%
மற்றவை 11% - 17%
பூந்தமல்லி சட்டமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு?
அதிமுக கூட்டணி 37% - 43%
திமுக கூட்டணி 35% - 41%
அமமுக 7% - 13%
மற்றவை 9% - 15%
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஒளிபரப்பாகும் மக்கள் யார் பக்கம்? நிகழ்ச்சியில் மீதமிருக்கும் 11 தொகுதிகளின் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன. இதில் திருவாரூர், அரூர், ஆம்பூர், ஆண்டிப்பட்டி, நிலக்கோட்டை, பரமக்குடி, ஒசூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகள் இடம்பெற உள்ளன.
இடைத்தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க. ஆட்சியை தக்க வைக்குமா? திருப்பத்தை ஏற்படுத்துமா தி.மு.க.? அதிர்ச்சி வைத்தியம் தரப்போகிறதா அ.ம.மு.க.? என்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் நிகழ்ச்சியாக இது அமைய உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பையும் மிஞ்சியதாக இடைத்தேர்தல் பிரசாரங்களும், விமர்சனங்களும் இருந்தன. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைந்தன.
இதில் அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி தானும் போட்டியிட்டது. இதே போல தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகளைக் கொடுத்து தானும் போட்டியிட்டது.
ஆனால் இடைத்தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேரடியாக களத்தில் மோதின. இந்த பிரதான கட்சிகளோடு அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தனித்து கோதாவில் இறங்கின.
தமிழகம் மற்றும் புதுவையின் தட்டாஞ்சாவடி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் என மொத்தம் 22 இடைத்தேர்தல் தொகுதிகளில் மொத்தம் 6 ஆயிரத்து 900 பேரிடம் தேர்தலுக்குப் பிறகான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களை விட இந்த முறை நடைபெற்ற தேர்தல் மிகவும் வித்தியாசமானது. அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் இதன் முடிவுகள் தமிழக ஆட்சியையே மாற்றும் என எதிர்க்கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டன.
‘23-ந்தேதிக்குப் பிறகு தி.மு.க. ஆட்சி’ என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார். ‘2021 வரை தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும், ஆட்சி மாற்றத்துக்கு வழியே இல்லை’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.
இன்றைய மக்கள் யார் பக்கம்? நிகழ்ச்சியில் இடம் பெறவுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் கடைசியாக நடைபெற்ற அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதிகளும் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story