பா.ஜ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெறுமா? - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்
பா.ஜ.க. அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23ல் நடக்கும் அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
சென்னை
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனையில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
அமைச்சர் தங்கமணி, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் அவர்களுடன் ஒரே விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
மக்களவை தேர்தலில், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பா.ஜ.க. முகாமில் பெரும் உற்சாகம் காணப்படுகிறது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு பா.ஜ.க. தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று இரவு விருந்தளிக்கிறார்.
இதில் வாக்கு எண்ணிக்கைக்குப் பிந்தைய நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனையும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனையில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அமைச்சர் தங்கமணி, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் அவர்களுடன் ஒரே விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதே இந்திய மக்களின் விருப்பம் என்றார். தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளிலும், 22 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெறும்.
கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக தோப்பு வெங்கடாசலம் அளித்துள்ள ராஜினாமா கடிதம் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும். பா.ஜ.க. அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23ல் நடக்கும் அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறினார்.
இதனிடையே, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா அளிக்கும் இரவு விருந்தில் பங்கேற்பதற்காக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா விஜயகாந்தும், சுதீஷும் இன்று பிற்பகலில் டெல்லி செல்ல உள்ளனர்.
Related Tags :
Next Story