தமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்


தமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்
x
தினத்தந்தி 20 May 2019 9:45 PM IST (Updated: 20 May 2019 10:30 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. #MakkalYaarPakkam #ElectionsWithThanthiTV


தமிழகத்தில் காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்றுடன் நடந்து முடிந்து உள்ளது. இதன் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலையும் தாண்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது 22 தொகுதிகளின் இடைத்தேர்தல். தமிழகத்தில் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதியான தட்டாஞ்சாவடியின் தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்பு முடிவுகள் தந்தி டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. 

அ.தி.மு.க. ஆட்சி நீடிக்குமா? தி.மு.க. திருப்பத்தை ஏற்படுத்துமா? அ.ம.மு.க. அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் தந்தி டி.வி.யில் தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது.

சாத்தூர்

 சாத்தூர் தொகுதியில் திமுக கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு திமுக கூட்டணிக்கு வாக்களித்ததாக 37-43 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.    அதிமுக கூட்டணிக்கு என்று 33 - 39 சதவீத வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு என்று 16-22 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். 

திருப்போரூர்

 திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில்- உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு அதிமுகவிற்கு வாக்களித்ததாக 42-48 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.  திமுகவிற்கு என 40-46 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு என்று 5 - 11 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

பெரம்பூர்

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 40-46 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 35-41 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 6-12 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 7-13 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

சோளிங்கர்

சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 43-49 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 39-45 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 4-10 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 2-8 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 37-43 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 35-41 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 15-21 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 1-7 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

குடியாத்தம்

குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 38-44 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 35-41 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 10-16 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 5-11 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

பாப்பிரெட்டிபட்டி

பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 36-42 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 34-40 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 14-20 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 4-10 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 31-37 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 29-35 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 15-21 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 13-19 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

மானாமதுரை

மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 36-42 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 34-40 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 16-22 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 2-8 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

பெரியகுளம்

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 36-42 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 34-40 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 15-21 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 3-9 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

பூந்தமல்லி

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 37-43 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 35-41 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வுக்கு வாக்களித்ததாக 7-13 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 9-15 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

தட்டாஞ்சாவடி

தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் - உங்கள் வாக்கு யாருக்கு? என்பதற்கு, அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 42-48 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக 38-44 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்ததாக 11-17 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.




Next Story