12,915 அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவங்கள் நிராகரிப்பு- தேர்தல் ஆணையம்


12,915 அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவங்கள் நிராகரிப்பு- தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 17 May 2019 12:32 PM IST (Updated: 17 May 2019 12:32 PM IST)
t-max-icont-min-icon

12,915 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவங்கள் நிராகரிப்பு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள தகவலில்,

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினருக்கு 4,35,003 பேருக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன .நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 12915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. தபால் வாக்கு விண்ணப்ப படிவங்கள் முறையாக நிரப்பப்படாதது உள்ளிட்ட காரணங்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளது என கூறி உள்ளது.

தமிழகத்தில் தபால் ஓட்டுக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் 2 நாட்களில் இணையதளங்களில் பதிவேற்ற வேண்டும்  என தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்  உத்தரவிட்டு உள்ளது. தபால் வாக்குகள் தொடர்பாக குழப்பம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.

Next Story