வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை - சத்யபிரதா சாகு


வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை - சத்யபிரதா சாகு
x
தினத்தந்தி 10 May 2019 5:15 PM IST (Updated: 10 May 2019 5:53 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய விவகாரங்கள் குறித்து நேற்று நடைபெற்ற அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு தேர்தல் அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும். 

வாக்கு எண்ணிக்கைக்காக கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப்படையை கோரியுள்ளோம்.  மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story