தமிழகத்தில் மே 19-ம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் -தேர்தல் ஆணையம்


தமிழகத்தில் மே 19-ம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் -தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 8 May 2019 9:25 PM IST (Updated: 8 May 2019 9:25 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மே 19-ம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 18-ம் தேதி நடந்த மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் 46 வாக்குச்சாவடிகளில் நடந்த பிரச்சினை குளறுபடிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிக்கை அளித்தார். 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் மே 19-ம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

தருமபுரி - 8, திருவள்ளூர்-1, கடலூர்-1, தேனி-2, ஈரோடு-1 ஆகிய வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story