அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 63 பேர் போட்டி; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் வருகிற 19ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக 68 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் 5 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். இதனால் 63 பேர் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இதேபோன்று ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 15 பேர் போட்டியிடுகின்றனர். சூலூர் தொகுதியில் 22 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 6 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் 16 சுயேச்சைகள் அடங்குவர். திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 பேர் போட்டியிடுகின்றனர்.
இதனால் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 137 பேர் போட்டியிடுகின்றனர்.
Related Tags :
Next Story