இடைத்தேர்தல் நடக்கும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் திண்ணை பிரசாரம்


இடைத்தேர்தல் நடக்கும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் மு.க.ஸ்டாலின்  திண்ணை பிரசாரம்
x
தினத்தந்தி 1 May 2019 10:59 AM IST (Updated: 1 May 2019 2:46 PM IST)
t-max-icont-min-icon

ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட அத்திமரப்பட்டி பகுதியில் மு.க.ஸ்டாலின் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மேதினப் பேரணியில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி அண்ணாநகரில் தொடங்கிய மே தினப் பேரணி முக்கிய சாலைகள் வழியாகச் சென்று சிதம்பரநகர் மைதானத்தில் நிறைவடைந்தது. மு.க.ஸ்டாலின் முன்னே செல்ல ஏராளமான திமுக தொண்டர்கள் அவரை பின் தொடர்ந்தனர்.

சிதம்பர நகர் மைதானத்தில் நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தி.மு.க. தான் தொழிலாளர்களின் காவலாளியாக செயல்பட்டு வருவதாகவும், மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களின் உரிமையை நசுக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். தொழிலாளர் தோழர்களுக்கும், விவசாயிகளுக்கும் 23-ஆம் தேதி விடிவுகாலம் பிறக்கும் என்றும் அவர் கூறினார்.

திமுக எம்.பி. கனிமொழியும் சிவப்பு புடவை அணிந்து தொமுசவின் மே தின பேரணியில் பங்கேற்றுள்ளார்.

ஓட்டப்பிடாரம் தொகுதி அத்திமரப்பட்டி பகுதியில் மு.க.ஸ்டாலின் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Next Story