திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு பரிசீலனையில் அ.தி.மு.க - தி.மு.க இடையே வாக்குவாதம்


திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு பரிசீலனையில் அ.தி.மு.க - தி.மு.க இடையே வாக்குவாதம்
x
தினத்தந்தி 30 April 2019 2:13 PM IST (Updated: 30 April 2019 2:13 PM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு பரிசீலனையின் போது அ.தி.மு.க - தி.மு.க இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை

தமிழக சட்டசபையில் 22 இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் கடந்த  18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்த போது, காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.

மீதம் உள்ள திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு, நாடாளுமன்றத்துக்கு இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மே 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. நேற்று மாலை 3 மணியுடன் மனுதாக்கல் முடிவடைந்தது.. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட  தாக்கல் செய்யப்பட்ட மனுகள் மீதான பரிசீலனை தனக்கன்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அதிமுகவினர் சிலர் திமுக வேட்பாளரான சரவணனின் வேட்பு மனுவில் விவரங்கள் தவறாக உள்ளதாக புகார் கூறினர்.

அதற்கு திமுகவினர் அதிமுக வேட்பாளர் முனியாண்டிக்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை இருப்பதாக குற்றஞ்சாட்டினர். இரு வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்று கொள்ளப்பட்ட நிலையில், அதிமுக - திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் முனியாண்டியின் பெயர் 2 இடத்தில் இருப்பதாக கூறி திமுக, அமமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வேட்புமனு ஏற்கப்பட்டது.  திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் சரவணனின் வேட்புமனு ஏற்கபட்டது.

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக, அ.ம.மு.க. வேட்பாளர்கள் உட்பட 21 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி, அதிமுக வேட்பாளர் கந்தசாமி, அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமாரன் ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

Next Story