அரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு


அரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 April 2019 9:22 PM IST (Updated: 20 April 2019 9:22 PM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.  இதில் வேலூர் மக்களவை தொகுதி தவிர்த்து மற்ற 38 தொகுதிகளுக்கான வாக்கு பதிவு நடந்தது.  18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களுக்கும் மக்கள் வாக்களித்தனர்.

இதேபோன்று மே 19ந்தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக மீனாட்சி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஈஸ்வரன், அமுதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக பாலகிருஷ்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஜெயராஜ், மீனாகுமாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

அரவக்குறிச்சி மற்றும் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22ம்தேதி முதல் 29ம்தேதி வரை வேட்புமனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

Next Story