தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவு


தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி  63.73 சதவீதம் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 18 April 2019 5:51 PM IST (Updated: 18 April 2019 5:59 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

சென்னை,

17 வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வேலூர் தொகுதி தவிர 38 தொகுதிகளில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக  நடந்து வருகிறது. பெரிய அளவில் அசம்பாவிதம் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது.

வாக்குப்பதிவு விபரங்களை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது. காலை 9 மணிக்கு 13 சதவீதமும், காலை 11 மணிக்கு 30.62 சதவீதமும் பதிவாகி இருந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத ஓட்டு பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

3 மணி நிலவரப்படி  52.02 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. கரூரில் அதிகபட்சமாக 56. 85 சதவீதமும், மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 45.65 சதவீதமும்,  சட்டசபை இடைத்தேர்தலில் 55. 97 சதவீதமும் வாக்குப்பதிவாகி உள்ளது என கூறினார்.

5 மணி வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது:-

5 மணி நிலவரப்படி  63.73 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக   சிதம்பரத்தில் 70.73 சதவீதமும், குறைந்தபட்சமாக  கன்னியாகுமரியில் 55.07 சதவீதமும் வாக்குப்பதிவாகி உள்ளது.  சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என கூறினார்.

Next Story