வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது: 305 இடங்களில் எந்திரங்கள் மாற்றம் - சத்யபிரதா சாஹூ


வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது:  305 இடங்களில் எந்திரங்கள் மாற்றம் - சத்யபிரதா சாஹூ
x
தினத்தந்தி 18 April 2019 12:15 PM IST (Updated: 18 April 2019 12:15 PM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது. 305 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரி கூறினார்.

சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது:-

வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்ட 305 இடங்களில், வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன .  திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதால், வாக்குப்பதிவு தொடங்கவே இல்லை. மாற்று எந்திரம் வருவதாக அதிகாரிகள் கூறியதால் மக்கள் காத்திருக்கின்றனர். வாக்குப்பதிவு தொடங்க தாமதமான பகுதிகளில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை, டோக்கன் வாங்கியவர்கள் வாக்களிக்கலாம். அதிகபட்சமாக ஆரணியில் 36.51 சதவீத வாக்குகள் பதிவு, குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 22.89 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என கூறினார்.

Next Story