அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்


அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்
x
தினத்தந்தி 18 April 2019 10:54 AM IST (Updated: 18 April 2019 10:54 AM IST)
t-max-icont-min-icon

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

சென்னை

தருமபுரியில் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் வாக்களித்தார்.

திருப்பூர் மாவட்டம் மூங்கில்தொழுவு பகுதியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சி. மகேந்திரன் வாக்களித்தார்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமி, காவேரிப்பட்டினத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பெரிய திருமங்கலம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த நத்தம் வாக்குச்சாவடியில் பெரம்பலூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதி வாக்குப்பதிவு செய்தார்.

தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், தமது குடும்பத்தினருடன் சென்னை நீலாங்கரையில் உள்ள புனித தோமையர் ஊராட்சி பள்ளியில் வாக்களித்தார்.

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் கரிசல்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

திமுக மகளிர் அணி தலைவியும், அக்கட்சியின் தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளருமான கனிமொழி, தென் சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரும் அக்கட்சியின் தமிழக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், தென் சென்னைக்குட்பட்ட சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியின் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ், மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

ஆரணி தொகுதிக்கு உட்பட்ட சேவூரில் உள்ள வாக்குசாவடியில் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மனைவி மற்றும் மகன்களுடன் வாக்குபதிவு செய்தார்.

Next Story