ஆண்டிபட்டியில் பணம் பறிமுதல் : தேர்தல் ஆணையத்துக்கு வருமானவரித்துறை அறிக்கை
ஆண்டிபட்டியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வருமானவரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஆண்டிபட்டி அ.ம.மு.க. அலுவலகத்தில், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பதுக்கி வைத்திருந்த பணம் சிக்கியது. சோதனை செய்ய விடாமல் தடுத்த அ.ம.மு.க. வினரை விரட்ட துணை ராணுவ படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 1.48 கோடி சிக்கியது என தெரிவிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க வார்டு வாரியாக பிரித்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் ஆண்டிபட்டியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வருமானவரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஆண்டிபட்டியில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் ரூ.1.48 கோடி பறிமுதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டபோது ரூ.11 கோடி சிக்கியது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இப்போது ஆண்டிபட்டி தொகுதியிலிலும் அதிக அளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே இது எங்களுடைய பணம் இல்லை என அமமுக கூறியுள்ளது.
Related Tags :
Next Story