தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவது எப்போது? தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி அளித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் 1.1.2019 அன்றைய தேதியை வாக்காளராகும் தகுதியாக நிர்ணயித்து கடந்த 2 மாதங்களாக சுருக்கத் திருத்தப் பணி நடைபெற்றது. அதன் அடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் ஜனவரி 4-ந் தேதியன்று வெளியிடப்படும் என்று சில நாட்களுக்கு முன்பு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சத்யபிரதா சாகு நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது:- தேசிய அளவில் இ.ஆர்.ஓ. நெட் என்ற வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது, நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களின் தகவல்களை ஒருங்கிணைத்துவிடும்.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டை பதிவுகளை உடனடியாக கண்டு பிடித்துவிடலாம். தற்போது தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பல இடங்களில் வாக்காளர்கள் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் பதிவு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே பட்டியலில் இருந்து எந்த பெயரை நீக்குவது என்பது தேர்தல் ஆணையத்துக்கு சவாலான பணியாக உள் ளது. இதே நிலை நாடு முழுவதும் உள்ளது. எனவே இந்த பணிகளை மேற்கொள்ள கூடுதல் அவகாசம் வேண்டும் என்று என்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியலை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினேன். எனவே, தமிழகத்தில் இறுதிப்பட்டியலை வெளியிட ஜனவரி 10-ந் தேதி வரை கால அவகாசம் அளித்து இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்பின்பு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story