எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதியிடம் டிராபிக் ராமசாமி முறையீடு


எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதியிடம் டிராபிக் ராமசாமி முறையீடு
x
தினத்தந்தி 29 Sept 2018 5:30 PM IST (Updated: 29 Sept 2018 5:30 PM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார்.

சென்னை,

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது நினைவைப் போற்றும் வகையிலும், அவரது சாதனைகள், அவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள், அவரின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட திட்டமிடப்பட்டு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணையின்படி இதுவரை 31 மாவட்டங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நாளை சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 3.30 மணியளவில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன்விழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. 

இந்தநிலையில் டிராபிக் ராமசாமி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்துள்ளார். இன்றே அவசர வழக்காக விசாரணை செய்ய நீதிபதி மணிக்குமார் விசாரிக்க தலைமை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

Next Story