இன்று 114-வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை


இன்று 114-வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 27 Sept 2018 10:20 AM IST (Updated: 27 Sept 2018 10:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு, தினத்தந்தி நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை,

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தினத்தந்தி நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலை மலர் நிர்வாக இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என். டி.வி., மாலைமுரசு ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினர்.



காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், வி.ஜி.சந்தோஷம், என்.ஆர்.தனபாலன், காசிமுத்து மாணிக்கம், சிம்லா முத்துசோழன், எர்ணாவூர் நாராயணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நாடார் சங்கங்களின் நிர்வாகிகள் ஆகியோரும் ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story