சிவில் நீதிபதி பதவிகளுக்கான மாதிரி நேர்முகத்தேர்வு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.நாகமுத்து தலைமையில் நடைபெற்றது
ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.நாகமுத்து தலைமையில் சிவில் நீதிபதி பதவிகளுக்கான மாதிரி நேர்முகத்தேர்வை மனிதநேய அறக்கட்டளையும், பெண் வக்கீல்கள் சங்கமும் இணைந்து நடத்தியது.
சென்னை,
சிவில் நீதிபதி காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு ஏற்கனவே நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், இறுதியாக நேர்முகத்தேர்வு வருகிற 27-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு எழுதுபவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மனிதநேய அறக்கட்டளை மற்றும் பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேர்முகத்தேர்வுக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக மாதிரி நேர்முகத்தேர்வு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள பெண் வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.நாகமுத்து தலைமை தாங்கி, மாதிரி நேர்முகத்தேர்வை நடத்தினார்.
இதில் மனிதநேய அறக்கட்டளையின் தலைவரும், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி, அவருடைய மகன் வெற்றி, சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்க தலைவர் வி.நளினி, செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். சிவில் நீதிபதி பதவிகளுக்கான முதல்நிலை, மெயின் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் இந்த மாதிரி நேர்முகத்தேர்வில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
நேர்முகத்தேர்வின் போது எப்படி பேச வேண்டும்? நடை, உடை, பாவனை எப்படியெல்லாம் இருக்க வேண்டும்? அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்த மாதிரியான பதில்கள் அளிக்க வேண்டும்? தெரியாத கேள்விகளுக்கு அதற்கு தகுந்தாற்போல் எப்படி பதில் சொல்ல வேண்டும்? என்பது உள்பட பல்வேறு தகவல்களை ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.நாகமுத்து, மாதிரி நேர்முகத்தேர்வில் பங்குபெற இருப்பவர்களுக்கு வழங்கினார்.
மேலும், சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் குறித்தும், சிவில், கிரிமினல் சட்டங்கள் குறித்தும், அதற்கு எந்த மாதிரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்? என்பதையும் எடுத்துக்கூறினார்.
மொத்தத்தில் நேர்முகத்தேர்வை எளிதாகவும், திறமையாகவும் கையாளுவது எப்படி? என்பதை விளக்கமாகவும், பொறுமையாகவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.நாகமுத்து அறிவுரையாக வழங்கினார்.
இந்த நிகழ்வில் மனிதநேய அறக்கட்டளையின் தலைவரும், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி நேர்முகத்தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு ஆலோசனை வழங்கி, பேசியதாவது:-
இன்றைய இளைஞர்கள் மத்தியில் அறியாமை என்ற பெரிய நோய் இருக்கிறது. மனப்பாடம் செய்து, அதை தேர்வாக எழுதி மதிப்பெண் பெற்று, தான் ஒரு சிறந்த மாணவன் என்ற போக்கு மாறவேண்டும். பள்ளி வகுப்புகளை தாண்டி உலகம் பறந்து விரிந்து இருக்கிறது. அவற்றையெல்லாம் சமூக, அரசியல், அறிவியல், பொருளாதாரம் ரீதியாக அறிந்து கொள்ளத்தக்க வகையில் பொது அறிவு ஆற்றலை வளர்த்து கொள்ள படிக்கின்ற பண்புகளை மாணவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஜனநாயகத்தின் 4 தூண்களான நாடாளுமன்றம்-சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் ஆகியவற்றில் நீதித்துறை மிக முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. அந்த நீதித்துறையில் தான் நீங்கள் வருகிறீர்கள். எதிர்காலம் உங்களை நம்பித்தான் இருக்கிறது. ஜனநாயக மாண்புகளை காப்பாற்றுவதே மனிதநேயத்தின் நோக்கம்.
நீதித்துறையின் அடிப்படை பண்புகள், குறிக்கோள்களுக்கு ஏற்றவாறு அந்த சிந்தனையின்படி நடப்பேன் என்று நீங்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி எடுத்தால் நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம். நாட்டின் நீதி பரிபாலனங்களை அதன் அடிப்படை மாறாமல் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story