கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டம் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ பிரையன் தமிழில் பேச்சு


கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டம் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ பிரையன் தமிழில் பேச்சு
x
தினத்தந்தி 30 Aug 2018 8:17 PM IST (Updated: 30 Aug 2018 8:17 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் எதிர்காலத்தை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம் இணைந்து முடிவு செய்ய வேண்டும் என்று தெரிக் ஓ பிரையன் பேசினார்.



கருணாநிதி மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி, மதுரை, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் நினைவேந்தல் கூட்டங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து, தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற தலைப்பில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் நினைவஞ்சலி கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது. துரைமுருகன் வரவேற்றுப் பேசினார். தேசியத் தலைவர்கள் பலரும் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டிப் பேசினர். 

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில் ‘ நெருக்கடி நிலையை எதிர்த்ததால் கலைஞரும், திமுகவினரும் கொடுமைப்படுத்தப்பட்டனர். கலைஞர் தேசத்தின் தலைவர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இரங்கல் தெரிவிக்கப்பட்ட வரலாறு கருணாநிதிக்கு உள்ளது. தேசிய நலனுக்காக தனி திராவிட நாடு கொள்கையை தளர்த்தி கொண்டவர் கருணாநிதி’  என்று குறிப்பிட்டார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேசுகையில், ‘ தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிப்படியாக கொண்டுவரப்படும் என்ற கருணாநிதியின் கொள்கைகளை ஸ்டாலினும் எடுத்து செல்ல வேண்டும்’ என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ பிரையன் பேசுகையில், ‘இங்கு ஆங்கிலத்திலோ, இந்தியிலோ, பெங்காலியிலோ பேச விரும்பவில்லை. தமிழில் பேச விரும்புகிறேன்’ என்றபடி பெங்காலியில் எழுதப்பட்ட தனது தமிழ் உரையை வாசித்தார். மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து போராடியவர் கருணாநிதி. கூட்டாட்சி தத்துவம், மாநில சுயாட்சிக்கு முன்னுரிமை அளித்தவர் கருணாநிதி
 கூட்டாட்சியை வலிறுத்தும் மாநிலக் கட்சிகள் சேந்து இந்தியாவை கைப்பற்றவேண்டும் என்றார். ‘நான் ரெடி, நீங்க ரெடியா’ என கூட்டத்தினரை பார்த்து கேட்டார். ‘வாழ்க, வாழ்க, கலைஞர் வாழ்க’ என கோஷம் எழுப்பியும் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். இதனால் கூட்டத்தில் உற்சாகம் எழுந்தது.

இந்தியாவின் எதிர்காலத்தை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம் இணைந்து முடிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 
 

Next Story