நாமக்கல்லில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு
நாமக்கல்லில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். #EdappadiPalaniswami #Flood
சென்னை,
காவிரி மற்றும் பவானி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஈரோடு மாவட்டத்தில் ஆற்றங்கரையோர பகுதிகளில் இருந்த சில குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. பவானிசாகர், சத்தியமங்கலம், பவானி, அம்மாபேட்டை, ஈரோடு கருங்கல்பாளையம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
இவ்வாறு 2 ஆயிரத்து 335 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். 1,324 குழந்தைகள் உள்பட 7 ஆயிரத்து 832 பேர் மீட்கப்பட்டு 67 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் வெள்ளம் பாதிப்பு இருக்கும் பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
வெள்ளபாதிப்பை ஆய்வு செய்தபின் முதல்-அமைச்சர் பழனிசாமி கூறுகையில்,
காவிரி, பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்கள் பாதிப்பு அடைந்துள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 7,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
அதன்பின்னர் ஈரோடு மாவட்டத்தை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் பள்ளிபாளையம் பாலம் வழியாக கருங்கல்பாளையம் வரும் அவர் அங்கும் காவிரி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டார்.
Related Tags :
Next Story