தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மத்திய நீர்வள ஆணையம்
தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #FloodAlert #MetturDam
புதுடெல்லி,
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைகளில் இருந்து மேட்டூருக்கு வரும் நீரின் அளவு 2.10 லட்சம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மேட்டூர், பவானிசாகர் மற்றும் அமராவதி அணைகளில் இருந்து வினாடிக்கு 2.8 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story