திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சாமி தரிசனம்

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று காலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினருடன் திருப்பதி வந்தார்.
திருப்பதி,
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினருடன் திருப்பதி வந்தார்.
அவரை, திருமலை–திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு வரவேற்று சாமி தரிசனம் செய்ய அழைத்துச்சென்றார். அங்கு, அவர் சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் லட்டு, தீர்த்தப் பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன. பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி கேட்க முயன்றனர். அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘‘கோவிலுக்கு வந்த இடத்தில் எந்தவித அரசியல் பேச விரும்பவில்லை’’ எனக் கூறி விட்டு புறப்பட்டார்.
Related Tags :
Next Story