தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டம் தொடங்கியது


தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 19 March 2018 4:48 AM GMT (Updated: 19 March 2018 4:48 AM GMT)

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டம் தொடங்கியது. பேரவை கூடியதும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. #TNAssembly

சென்னை,

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்று மாலையே சட்டசபை சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதன்பிறகு, 16, 17, 18-ந் தேதிகளில் 3 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு இரங்கல் சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து  கேள்வி நேரம் நடைபெற உள்ளது.  கேள்வி நேரம் முடிந்ததும், பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். பட்ஜெட் மீதான விவாதம் நாளையும், நாளை மறுநாளும் (21-ந் தேதி) தொடர்ந்து நடைபெறுகிறது. இறுதி நாளான 22-ந் தேதி, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார்.

Next Story