ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் சி.பி.சி.ஐ.டி.யின் ஏ.டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி நேரில் ஆஜர்


ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் சி.பி.சி.ஐ.டி.யின் ஏ.டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி நேரில் ஆஜர்
x
தினத்தந்தி 13 March 2018 11:23 AM IST (Updated: 13 March 2018 11:23 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் சி.பி.சி.ஐ.டி.யின் ஏ.டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி இன்று நேரில் ஆஜராகினார். #Jayalalithaa

சென்னை,

ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆணையம் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்கள், ஜெயலலிதாவுடன் வசித்தவர்கள், அவரது உதவியாளர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என  பல்வேறு  தரப்பினரிடம்  விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியது.

ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் விளக்கம் அளித்துள்ளது.  ஜெயலலிதா உயிரோடு இருந்த போது தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் மற்றும் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி பதில் அளித்தனர்.

இதுபோன்று பலர் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி நேரில் விளக்கம் அளித்து வந்தநிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் சி.பி.சி.ஐ.டி.யின் ஏ.டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி இன்று நேரில் ஆஜராகினார்.  இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபொழுது உளவு துறை ஐ.ஜி.யாக இருந்துள்ளார்.

Next Story