தமிழ்நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
ராஜேஷ் லக்கானி திடீரென மாற்றப்பட்டு, புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளார்.#SatyaBrataSahoo #RajeshLakhoni
சென்னை,
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி ராஜேஷ் லக்கானி பொறுப்பேற்றார். 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத்தேர்தலை அவர் திறம்பட நடத்தினார். கடந்த டிசம்பர் மாதம் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையும் அவர் நடத்தினார்.
ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் நிலையை கடுமையாக எதிர்த்தார். இந்த நிலையில், தன்னை அந்த பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து தமிழக அரசுக்கும், இந்திய தேர்தல் கமிஷனுக்கும் கடிதம் அனுப்பினார்.
எனவே அடுத்த தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படக் கூடிய அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசிடம் இந்திய தேர்தல் கமிஷன் கேட்டது. அதன்படி சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்யபிரதா சாஹூ உள்பட 3 அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் சத்யபிரதா சாஹூவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமித்தும், ராஜேஷ் லக்கானியை அந்த பதவியில் இருந்து விடுவித்தும் உத்தரவிடும்படி தமிழக அரசுக்கு இந்திய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது.
இதுகுறித்த உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விரைவில் பிறப்பிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டதைச் சேர்ந்தவர் சத்யபிரதா சாஹூ. இவர் 3.5.1969 அன்று பிறந்தார். 1997-ம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி ஏற்றார். மாநில போக்குவரத்து கமிஷனர் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

Related Tags :
Next Story