மதுரை: பாலமேட்டில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு துவங்கியது

மதுரை மாவட்டம் பாலமேட்டில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. #jallikattu | #PongalFestival
மதுரை,
மதுரை மாவட்டம் பாலமேட்டில் உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பச்சைக்கொடி காட்டி துவங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டில் 1080 காளைகள், 1188 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி அங்கு பாதுகாப்பு பணிக்காக 1,200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டில் வெற்றிபெறும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்க விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து வரும் காளைகளை, மாடு பிடி வீரர்கள் பிடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற ஆம்புலன்சு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு திடலில் மாடுபிடி வீரர்கள், காளைகள் பாதுகாப்பிற்காக சுமார் 200 அடி தூரத்திற்கு தேங்காய் நார்கள் பரப்பப்பட்டு உள்ளது.ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து குவிந்து உள்ளனர். அவர்கள் விசில் அடித்தும் பலத்த கரகோஷம் எழுப்பியும், வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே உள்ளனர். #jallikattu | #PongalFestival
Related Tags :
Next Story