என்னை சந்திக்க வரும்போது ‘‘சால்வை, பூங்கொத்து கொண்டு வருவதை தவிருங்கள்’’ தமிழக கவர்னர் வேண்டுகோள்


என்னை சந்திக்க வரும்போது ‘‘சால்வை, பூங்கொத்து கொண்டு வருவதை தவிருங்கள்’’ தமிழக கவர்னர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 Nov 2017 11:24 PM IST (Updated: 10 Nov 2017 11:24 PM IST)
t-max-icont-min-icon

என்னை சந்திக்க வரும்போது ‘‘சால்வை, பூங்கொத்து கொண்டு வருவதை தவிருங்கள்’’ என தமிழக கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். தான் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் விழாக்களிலோ மற்றும் தன்னை சந்திக்க வரும்போதோ தனக்கு சால்வை, பூங்கொத்து வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

மேலும் இந்த வேண்டுகோளை பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

மேற்கண்ட தகவல் கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story