இன்று சபாநாயகரை சந்திக்கும் திட்டமில்லை - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ பேட்டி
இன்று சபாநாயகரை சந்திக்கும் திட்டமில்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன் கூறினார்.
சென்னை,
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை இழந்துவிட்டதாகவும் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறும் எதிர்க்கட்சியான திமுக ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளது. அதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்திலும் திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் முதல் அமைச்சருக்கு அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், ஆளுநர் முடிவுக்காக காத்திருக்க போவதாக டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி

தூக்கியுள்ள டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள பெண்டிங் பான் எனும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று, சபாநாயகர் தனபால், 19 பேருக்கும், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார். அதற்கு, அவர்கள் இடைக்கால விளக்கம் அளித்தனர். இதையடுத்து, முழு விளக்கம் அளிக்க, செப்டம்பர் 14ல் (இன்று) நேரில் ஆஜராகும்படி, சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், கர்நாடக மாநிலம் குடகுவில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று சென்னை வந்து சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளிக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக செய்திகள்வெளியாகி உள்ளது.
தினகரன் அணியில் இருந்து பிரிந்து எடப்பாடி அணிக்கு ஆதரவளித்த ஜக்கையன் எம்.எல்.ஏ.. மட்டும் தனக்கு அளித்த நோட்டீஸ் தொடர்பாக விளக்கமளிக்க, காலை 10.30 மணிக்கு, சபாநாயகரை சந்திக்கிறார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன் கூறும் போது இன்று சபாநாயகரை சந்திக்கும் திட்டமில்லை. ஆட்சியை கலைக்கவும் தயங்க மாட்டோம், தினகரனின் வழியில் நாங்கள் நிற்போம் என கூறினார்.
இந்த நிலையில் அனைத்து அமைச்சர்களுக்கும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவசர அழைப்பு விடுத்துள்ளார். காலை 10 மணிக்கு அமைச்சர்களுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.

Related Tags :
Next Story